தமிழர் தாயகம் நீண்ட நெடிய வரலாற்று கூறுகளை கொண்டது. தொன்மையான கற்கருவிகள் தொடங்கி அக் கற்களின் மேல் எழுத்துகளை வெட்டும் நுட்பம் வரையிலான நெடிய வரலாற்று தொடர்ச்சியை கொண்ட நிலப்பரப்பு. இத்துணைகண்டத்தின் நாகரிகம், கலை, மொழி மற்றும் எழுத்துதியல் வரலாற்றை எழுத வேண்டுமாயின் அவற்றை தமிழர் தாயத்திலிருந்து தான் தொடங்க வேண்டும் என உறுதியாக சொல்லும் அளவிற்கு மரபும் வரலாறும் இங்கே வேரூன்றி நிற்கிறது.
இந்த இணையத்தளத்தில் முழுமையாக படித்தறியப்படாத சிந்து வெளி மற்றும் தென்னக பெருங்கற்படைசின்னங்களில் உள்ள குறியீடுகளும் மற்றும் படித்தறியப்பட்ட பானையோட்டு கீரல் எழுத்துகளுக்கும் சில தனிக் கல்வெட்டுகள் நீங்களாக உள்ள படிதறியப்பட்ட 95 தொன்மைத் தமிழ் கல்வெட்டுகளின் தரவு அட்டவணையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயனர் கல்வெட்டுகளின் பெயரை கொண்டு தேடவும் மற்றும் இரு தனி கல்வெட்டுகளை ஒப்பிட்டு பார்க்கவும் முடியும். முதற்கட்டமாக கிமு 500 முதல் கிபி 200 வரையிலான தொன்மைத் தமிழ் கல்வெட்டுகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த துணைகண்டத்தில் உள்ள கல்வெட்டுகளில் தமிழ் மொழியிலான கல்வெட்டுகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன. காலப் பரப்பில் நோக்கும் போது பாண்டியர் ஆட்சியின் கீழும் சோழர் ஆட்சியின் கீழும் அதிகப்படியான கல்வெட்டுகள் வெட்டப்பட்டன எனலாம்.
நாம் எடுத்து கொண்ட கல்வெட்டுகள் காலத்தால் முந்தியவை, கிமு 600-க்கும் கிபி 200-க்கும் உட்பட்டவை என மொத்தமாக 95 தொன்மைத் தமிழ் கல்வெட்டுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுள்,
மொத்தமுள்ள 95 கல்வெட்டுகளில் 12 கல்வெட்டுகளில் குறியீடுகள் காணப்படுகிறது.
எண் | ஊர் | கல்வெட்டு | குறியீடுகள் |
---|---|---|---|
1 | கொங்கர்புளியங்குளம் | 2 | 4 |
2 | விக்கிரமங்கலம் | 1 | 1 |
3 | அழகர்மலை | 8 | 8 |
4 | தொண்டூர் | 1 | 1 |
மொத்தமுள்ள 95 கல்வெட்டுகளில் 6 ஊர்களில் உள்ள 10 கல்வெட்டுகளில் 14 பாகத எழுத்துகள் கலந்துள்ளது.
எண் | ஊர் | கல்வெட்டு | எழுத்துகள் |
---|---|---|---|
1 | மாங்குளம் | 3 | 7 |
2 | மறுகால்தலை | 1 | 1 |
3 | மேட்டுப்பட்டி | 2 | 2 |
4 | அழகர்மலை | 2 | 2 |
5 | ஐயர்மலை | 1 | 1 |
6 | ஜம்பை | 1 | 1 |
கல்வெட்டு | |
---|---|
மொழி | |
வரிவடிவம் | |
தன்மை | |
அச்சு | |
தீர்க | |
கண்டுபிடித்தவர் | |
கண்டுபிடித்த ஆண்டு | |
ஊர் | |
வட்டம் | |
மாவட்டம் | |
மாநிலம் | |
பண்டைய நாடு | |
கல்வெட்டு வரி | |
தற்கால தமிழில் | |
பொருள் | |
காலம் | |
சமயம் | |
குறியீடுகள் | |
பாகதம் | |
நூற்குறிப்பு |
எண் | கல்வெட்டு | ஊர் | மொழி | வரிவடிவம் | தன்மை | காலம் | கல்வெட்டு | தமிழில் |
---|